பொங்கல் ரேசில் இன்னொரு படமா...? : அருண் விஜயின் பிறந்தநாளில் இருளன் முதல்பார்வை வெளியீடு
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‛இருளன்' படத்தின் முதல் பார்வை அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. இதில் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக அருண் விஜய் நடிப்பதாக தெரிகிறது. இன்னொரு மார்டன் கெட்-அப்பும் அவருக்கு இருக்கிறது. இந்த படம் தைத்திங்களில் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பொங்கலுக்கு அருள்நிதி நடித்த ‛டிமான்டி காலனி 3', விஜய் சேதுபதியின்‛ பாக்கெட் நாவல்', விஜே சித்துவின் ‛டயங்கரம்', பிரபுதேவா நடித்த ‛மூன்வாக்', பா.ரஞ்சித்தின் ‛வேட்டுவம்' மற்றும் அஜித்தின் கார் ரேஸ் படமான ‛கிளாடியேட்டர்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த போட்டியில் ‛இருளன்' படமும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் வெளியீடு என சொல்லாமல் தைத்திங்களில் ரிலீஸ் என ‛இருளன்' படக்குழு அறிவித்து இருப்பதால் பொங்கலுக்குபின் தை மாதம் வெளியாகவும் வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
கொம்பன், மருது, குட்டிப்புலி, விருமன் போன்ற படங்ளை இயக்கிய முத்தையா சற்றே இடைவேளைக்குபின் இயக்கிய படம் இருளன். இது ஒரு உண்மை சம்பவம் தாக்கத்தில் உருவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.