உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரோஜாவின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்

ரோஜாவின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்


தமிழில் ஆர்.கே. செல்வமணி இயக்கிய 'செம்பருத்தி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா.. அதன்பிறகு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாகப் பல வருடங்கள் வலம் வந்தார். பிறகு அரசியலில் நுழைந்து எம்எல்ஏ, அமைச்சர் எனப் பல பொறுப்புகளை ஏற்று, அரசியல்வாதியாகப் பயணித்து வருகிறார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் ரோஜா. இந்த நிலையில் தனது 54வது பிறந்தநாளை தனது வீட்டில் கொண்டாடியுள்ளார் ரோஜா.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 90களின் பிரபலங்களான நடிகைகள் மீனா, சங்கீதா, நடிகர் பிரபுதேவா, இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட் பிரபு, மோகன் ராஜா உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு ரோஜாவை வாழ்த்தினார்கள். கேக் வெட்டும் கொண்டாட்டத்தின் போது ரோஜா கேக்கை பிரபுதேவாவுக்கு ஊட்ட முயற்சிக்க, அவர் இரண்டு மூன்று முறை அதைப் பெற்றுக் கொள்ளாமல் பின்வாங்க, இப்படி ஜாலியான கலாட்டாவுடன் இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !