'வாரணாசி' புதிய அப்டேட்: மகேஷ் பாபு -ராஜமவுலி ரசிகர்களுக்கு ஆச்சரிய தகவல்!
கடந்த ஓராண்டுக்கு முன்பு, வாரணாசி படக்குழு நடத்திய பிரமாண்ட நிகழ்வு இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டினரின் கவனத்தையும் ஈர்த்தது. 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'பாகுபலி' படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் இப்படம் உருவாவதால், படக்குழுவிடமிருந்து நேற்று ஏதேனும் சிறப்பான அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அது அவர்களுக்கு கிடைத்தும் விட்டது.
'வாரணாசி' படக்குழு தரப்பில் வெளியான புதிய தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாகவும், தற்போது கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், டப்பிங் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதை ஒரு அப்டேட்டாக நீங்கள் நினைத்தால், இது ஒரு அப்டேட் தான். இல்லையென்றால், அந்தப் பெரிய அதிரடிக்காக நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். இது மகேஷ் பாபு மற்றும் ராஜமவுலி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படக்குழு அடுத்து என்ன திட்டமிட்டுள்ளது என்பதை அறிய அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த வாரணாசி படம் 2027ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் பிரித்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.