'மெண்டல் மனதில்' பட அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படம் 'மெண்டல் மனதில்'. நீண்ட நாட்களாகவே விட்டுவிட்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் எண்பது சதவீத பணிகள் ஏற்கனவே முடிவடைந்து இருந்த நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ், இந்தப் படத்திற்கு இசையமைப்பதுடன் முதன்முறையாக செல்வராகவனின் டைரக்ஷனில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
இது குறித்த புகைப்படங்களை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ஜிவி பிரகாஷ், மாஸ்டர் செல்வராகவன் சாருடன் இணைந்து மெண்டல் மனதில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது செல்வராகவனின் ஒரு காதல் கதை என்று பதிவிட்டுள்ளார்.
இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பணி பாக்கி இருப்பதாகவும், 2027-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தப் படத்தை வெளியிட உள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.