எந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம்? உறுதி செய்த சீன் பட இயக்குனர்
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு சீன் திரைப்படம் வெளியானது.. கிட்டத்தட்ட தற்போது வரை 200 கோடிக்கு மேல் வசூலித்து அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை இந்தப் படம் கொடுத்துள்ளது. மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே அவர் இயக்கிய ரோமாஞ்சம், ஆவேசம், தற்போது வெளியாகி உள்ள சீன் என ஒவ்வொரு படங்களிலுமே இரண்டாம் பாகத்திற்கு ஒரு லீட் கொடுத்து படத்தை முடித்து இருப்பார்.
இந்த நிலையில் சீன் படத்திலும் அதேபோல ஒரு எதிர்பார்ப்புடன் படத்தை முடித்து இருந்ததால், இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் நிச்சயம் இருக்கிறது என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பேசி வந்தார்கள். செய்தியாளர்களும் அதே கேள்வியை இயக்குனர் ஜித்து மாதவனிடம் கேட்டனர். அதற்கு, நான் ஏற்கனவே சொன்னபடி ரோமாஞ்சம் படத்திற்கு மட்டுமே இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் இருக்கிறது. மற்ற இரண்டு படங்களுக்கும் தற்போது இரண்டாம் பாகத் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிப்படக் கூறியுள்ளார்.