உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முற்பிறவியில் அசோக வம்சத்து ராஜாவாக இருந்தேன் : சஞ்சய் தத்

முற்பிறவியில் அசோக வம்சத்து ராஜாவாக இருந்தேன் : சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது ஆளுமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். பாலிவுட்டையும் தாண்டி சமீபகாலமாக தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் தத் கலந்து கொண்டபோது தனது முற்பிறவி குறித்த சில விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இதில் அவர் கூறும் போது, ஒரு சிறிய கிராமம் ஒன்று இருக்கிறது. அங்கே உங்கள் கைரேகையை கொடுத்தால் உங்களுக்கான ஓலைச்சுவடி ஒன்றை கண்டுபிடித்து அதன் மூலம் உங்கள் முற்பிறவியை பற்றி விளக்கிச் சொல்வார்கள். அப்படி நான் பார்த்ததில் முற்பிறவியில் அசோகப் பேரரசு வம்சத்தில் ஒரு ராஜாவாக இருந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிறவியில் நான் ஒரு தீவிர சிவ பக்தனாக இருந்தேன். அதனால் காடுகளுக்குச் சென்று உண்ணா நோன்பு இருந்து பட்டினியால் இறந்து போனேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் முற்பிறவியில் தான் செய்த கர்ம வினைகள் காரணமாகவே தான் இந்தப் பிறவியில் நல்ல குடும்பத்தில் பிறந்துள்ளதாகவும், அதே நேரத்தில் முற்பிறவியில் தான் செய்த கொலைகளுக்காக இந்தப் பிறவியில் சில தடைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளதை நம்புவதாகவும் கூறியுள்ளார் சஞ்சய் தத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !