'இஞ்சி வெல்லம்' ஜனவரி 29 ரிலீஸ் : காரணம் என்ன ?
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் பண்டிகை நாட்களில்தான் புதிய படங்களை வெளியிட விரும்புவார்கள். பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், என தமிழ் சினிமாவில் இப்படியான சில முக்கிய நாட்கள் உண்டு.
2027 பொங்கலுக்கு வெளியாக உள்ள சில படங்களை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள 'இஞ்சி வெல்லம்' படத்தை ஜனவரி 29ல் வெளியிடப் போவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். பொங்கல் வெளியீடாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட படத்தை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வெளியிடுகிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரும் படங்களுக்கு வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். 2027 பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் 'மகா காளி, ஜனவரி 12 விடுதல, காகா, ஜார்ஸ் கிரிஷ், பேமிலி பாக்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இத்தனை தெலுங்குப் படங்கள் வெளிவருவதால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அவற்றிற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுத்து தியேட்டர்களை கொடுப்பார்களாம்.
எனவே, மணிரத்னம் அவரது 'இஞ்சி வெல்லம்' படத்தைத் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும், நல்ல விலையும் கிடைக்கும் என்று வெளிநாட்டு வினியோகஸ்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று மணிரத்னமும் படத்தை பொங்கலுக்கு அறிவிக்காமல் ஜனவரி 29 வெளியீடு என்று அறிவித்துள்ளதாகக் கோலிவுட்டில் சொல்கிறார்கள்.