மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகும் பேமிலி ஆக்சன் திரில்லர் படம்
சூர்யாவின் தயாரிப்பில் வெளியான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் மித்துன் மாணிக்கம். 'ஐவர் ஆட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தற்போது மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பேமிலி பாய்'.
அவருடன் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் இசையமைத்திருக்கிறார்.
படம் குறித்து மித்துன் மாணிக்கம் கூறும்போது ''உண்மை சம்பவத்தை தழுவி பேமிலி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. வருகிற டிசம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார்.