உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இடைவெளி ஏன்?: இவானா விளக்கம்

இடைவெளி ஏன்?: இவானா விளக்கம்


பாலா இயக்கிய 'நாச்சியார்' படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இவானா. அதன் பிறகு சில ஆண்டுகள் தமிழில் வாய்ப்பு இல்லாமல் மலையாள படத்திற்கு சென்ற அவர் மீண்டும் 'லவ் டுடே, டிராகன்' படங்களில் நடித்தார். தற்போது ஜீவாவுடன் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : காதல் ரொமான்ஸ் கலந்த காமெடி படம். படத்தின் டைட்டில் போலவே படமும் ஜாலியாக இருக்கும். ரிலேஷன்ஷிப்பிலிருந்து கல்யாணம் வரை இருக்குற காலகட்டத்தில் நடக்கக்கூடிய விஷயங்கள், அதிலுள்ள சுவாரஸ்யங்கள், சிக்கல்களை காமெடியா சொல்லும் படம்.

ஒவ்வொரு படத்திற்கும் இடையில் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன் என்று பலரும் கேட்கிறார்கள் ரொம்பவே கவனமாக தேர்ந்தெடுத்துத்தான் படங்களில் நடிக்கிறேன். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தேன். சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் சினிமா நடிகை ஆனேன். தமிழில் நல்ல இடம் கிடைத்தது. முதல் படமே பாலாவின் இயக்கத்தில். 'லவ் டுடே' எனக்கு பெரிய மைல்கல்லாக அமைந்தது.

நிறைய படங்களில் நடிப்பதை விட சிறப்பான படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு கதையைக் கேட்கும் போது அந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கிறதா, அந்த கேரக்டர் என்னால் சிறப்பாக செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். அதற்கு சரி என்று தோன்றினால் மட்டுமே படங்களில் நடிக்கிறேன்.

அடுத்த பத்து வருடங்களுக்குப் பிறகும் சினிமாவில் இருப்பேனா என்று தெரியாது. ஆனாலும் இவானா என்ற ஒரு நடிகை இருந்தார், நல்ல படங்களில் நடித்தார் என்ற பெயர் பெற்றால் போதுமானது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !