உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026ல் 200ஐ நெருங்கும் படங்கள்…ஆனால், 100 கோடியில் 8 படங்கள் மட்டுமே…

2026ல் 200ஐ நெருங்கும் படங்கள்…ஆனால், 100 கோடியில் 8 படங்கள் மட்டுமே…


2026ம் ஆண்டின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். இன்னும் 50 நாட்களில் புதிய ஆண்டான 2027 பிறந்துவிடும். கடந்த வார தீபாவளி வெளியீடுகளுடன் இந்த வருடத்தில் இதுவரையில் தியேட்டர்களில் வெளியாகியுள்ள படங்களின் எண்ணிக்கை 190ஐக் கடந்து 200ஐ நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

தீபாவளிக்கு வெளியான சூர்யா நடித்த 'சீன்' படம் 145 கோடி வசூலைக் கடந்தது. இந்தப் படத்துடன் இந்த 2026ம் வருடத்தில் 100 கோடி வசூலைக் கடந்த படங்களின் எண்ணிக்கை 7ஐத் தொட்டுள்ளது.

இதற்கு முன்பாக, “ஜெயிலர் 2, மண்டாடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், டிசி, ஜனநாயகன், கருப்பு, பராசக்தி” ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.

100 கோடி வசூலைப் பெறவில்லை என்றாலும், “மீசைய முறுக்கு 2, டோரதி, மொத ராத்திரி, கட்டா குஸ்தி 2, பிளாஸ்ட், யூத், தாய் கிழவி, வித் லவ், தலைவர் தம்பி தலைமையில்” ஆகிய படங்கள் நல்ல வசூலைப் பெற்று வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.

இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக 'ஜெயிலர் 2' படம் இருக்கிறது. அந்தப் படம் 850 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் இன்னும் எஞ்சியுள்ள 7 வெள்ளிக் கிழமைகளில் சுமார் 50 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில படங்கள் 100 கோடி வசூலைப் பெற வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !