பொலிமேரா 3 : அர்ஜுனின் முதல்பார்வை வெளியீடு
தெலுங்கில் உருவாகி வரும் பொலிமேரா- 3 என்ற படத்தில் விராவி என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுனின் முதல் பார்வை போஸ்டரை தற்போது வெளியிட்டு, படத்தின் மூன்றாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளனர்.
புதிதாக வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோ, அமாவாசை நாளில் ஒரு மாயாஜாலக் கோயில் பின்னணியில் படத்தின் ஆன்மிக, அமானுஷ்ய உலகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறது. இதில் விஷ்ணு, சிவன் மற்றும் அனந்த பத்மநாப சுவாமியின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து சத்யம் ராஜேஷ் பில்லி சூனியம் மந்திரப் சடங்குகளைச் செய்யும் காட்சிக்குக் கதை நகர்கிறது. இந்தத் தொடர் காட்சிகள் பொலிமேரா வரிசையின் முக்கிய அங்கமான அமானுஷ்ய அம்சங்களை மீண்டும் கொண்டு வருகின்றன.
அர்ஜுன், வாள் ஏந்தியபடி ஒரு தீவிரமான போர் வீரர் தோற்றத்தில் விராவியாக மாஸான என்ட்ரி கொடுக்கிறார். அவரது கம்பீரமான தோற்றம் இந்த பர்ஸ்ட் லுக்கிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
பொலிமேரா- 3 படத்தை வம்சி நந்திபாட்டி என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி நிறுவனங்களின் கீழ் வம்சி நந்திபாட்டி மற்றும் பாரத் நாரங் தயாரித்துள்ளனர். டாக்டர் அனில விஸ்வநாத் கதையை எழுதி, திரைக்கதை, வசனம் அமைத்து படத்தை இயக்கியுள்ளார்.