உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்ப்பனகை ஆடிசனுக்காக சென்று ஊர்மிளாவாக தேர்வு செய்யப்பட்ட 'ராமாயணா' நடிகை

சூர்ப்பனகை ஆடிசனுக்காக சென்று ஊர்மிளாவாக தேர்வு செய்யப்பட்ட 'ராமாயணா' நடிகை


இந்திய அளவில் ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்த 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி ஆகியோருடன் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை ஈர்க்கும்படியாக தங்களது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் இந்த படத்தில் ஊர்மிளா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோனியா பலானி.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “முதலில் இந்த படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் ஆடிசனுக்கு சென்றிருந்தேன். ஆனால் அதற்கு ஆடிஷன் செய்தாலும் கூட அன்றைய தினமே திடீரென ஊர்மிளா கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டேன். படத்தில் சீதாவாக நடித்த சாய் பல்லவி எனக்கு ஒரு மூத்த சகோதரி போல வழிகாட்டினார். இயல்பாகவே அவரிடம் சீதாவைப் போன்று அமைதியான அடக்கமான குணங்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த பிரம்மாண்ட படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது குறித்து கவலைப்படவில்லை. இந்த காவியத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !