உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்சார் சிக்கலால் புரமோஷன் நிகழ்ச்சியை நிறுத்திய சர்வானந்தின் 'போகி' படக்குழு

சென்சார் சிக்கலால் புரமோஷன் நிகழ்ச்சியை நிறுத்திய சர்வானந்தின் 'போகி' படக்குழு

நடிகர் சர்வானந்த் தெலுங்கில் இளம் நடிகராக வலம் வருகிறார். தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டுகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் 'போகி' என்கிற படத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ள இதை சம்பத் நந்தி இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்கள். அதற்கேற்றபடி இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் அறிவித்திருந்தார்கள்.

ஆனால் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இந்தப் படத்தை தணிக்கைக் குழுவிற்கு அனுப்பியபோது அவர்கள் இதனை 'ரிவைசிங் கமிட்டி'க்கு அனுப்பி வைத்துள்ளதால், திட்டமிட்டபடி படத்தை நவம்பர் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய முடியாது என்பதாலேயே புரமோஷன் நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டார்கள். மேலும் பிரச்சினைகள் முடிந்த பிறகு படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !