உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ; 'சீன்' படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு

கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ; 'சீன்' படத்திற்கு மகேஷ்பாபு பாராட்டு


சூர்யா நடிப்பில் தீபாவளி ரிலீஸ் ஆக சமீபத்தில் 'சீன்' திரைப்படம் வெளியானது. நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கியுள்ளார். சூர்யா படம் என்றாலும் போலீஸ் படம் என்றாலும் கூட இது சற்றே மாறுபட்ட பாணியில் படமாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பிரபலங்கள் கூட பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இந்த படத்திற்கு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபு, சீன் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சீன் படம் பார்த்தேன். ரொம்பவே விரும்பத்தக்க கூலான ஒரு ஸ்மார்ட்டான வேடிக்கைகள் நிறைந்த படம். போலீஸ் அதிகாரியாக இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். நஸ்ரியா மற்றும் நஸ்லேன் ஆகியோரும் வியக்கத்தக்க நடிப்பை வழங்கியுள்ளனர். இயக்குனர் ஜீத்து மாதவனின் எழுத்தும் அதை திரையில் புத்திசாலித்தனமாக அவர் கொண்டு வந்த விதமும் சூப்பர். ஒவ்வொரு டிபார்ட்மெண்டுமே நம்மை ஈர்க்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய படம்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !