உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கல்கி 2898 ஏடி - பாகம் 2': கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு புதிய புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு!

'கல்கி 2898 ஏடி - பாகம் 2': கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு புதிய புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு!


நவம்பர் 7ம் தேதியான நேற்று கமல்ஹாசன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு 'கல்கி 2898 ஏடி' படத் தயாரிப்பாளர்கள் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதோடு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கமல்ஹாசனின் சுப்ரீம் யாஸ்கின் தோற்றத்தின் இதுவரை வெளிவராத ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

கல்கி படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றியபோதிலும், தனது மிரட்டலான அவதாரத்தால் ரசிகர்களை கவர்ந்தார் கமல்ஹாசன். மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் இடையேயான நேரடி மோதலுக்குக் களம் அமைத்துள்ளது. இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் முழுநீளக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனுக்குப் பதிலாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கல்கி- 2 படம் திரையரங்குகளுக்கு வர எதிர்பார்த்ததை விட கூடுதல் காலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !