'பாக்கெட் நாவல்' படமாவது மாளவிகா மோகனனுக்கு கைகொடுக்குமா?
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் மாளவிகா மோகனனின் கவர்ச்சியான புகைப்படங்கள் தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. தற்போது இன்ஸ்டாகிராமில் அவரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தபோதிலும் அவரது திரை வாழ்க்கை எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றி பெறாமல் சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த தமிழ் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.
விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்துள்ள 'பாக்கெட் நாவல்' படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
பிரபாஸ் உடன் இணைந்து 'தி ராஜா சாப்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அந்த படம் கடந்த 2026 ஜனவரி 9 அன்று வெளியானது. ஆனால், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்ததால், அதன் பிறகு மாளவிகா மோகனனுக்கு வேறு தெலுங்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில், தற்போது பாக்கெட் நாவல் படம் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுக்கும் என்கிற பெரிய நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாளவிகா மோகனன், இந்த ஆண்டு பொங்கல் எனக்கு வெற்றிப்பொங்கலாக அமையும் என்கிறார்.