தீபாவளி போட்டியிலும் சிறப்பான முன்பதிவில் 'ஜெயிலர் 2'
2026ம் வருட தீபாவளிக்கு தமிழில் சூர்யா நடித்த 'சீன்', நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' ஆகிய நேரடி தமிழ்ப் படங்களும், ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட 'இராமாயணம்' படமும் வெளியாகி உள்ளன. மற்ற இரண்டு படங்களைக் காட்டிலும் சூர்யாவின் 'சீன்' படத்திற்கு நாளை வரை முன்பதிவு சிறப்பாகவே உள்ளது.
தீபாவளி படங்கள் ஒரு பக்கம் போட்டியில் இருந்தாலும் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான 'ஜெயிலர் 2' படத்திற்கான முன்பதிவு திருப்திகரமாக உள்ளது. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு நடந்துள்ளது. குறிப்பாக திங்கள் கிழமை வரையிலும் நிறைவான முன்பதிவைப் பார்க்க முடிகிறது.
இப்படம் ஏற்கெனவே 820 கோடியைக் கடந்துள்ளது என்று சொல்லப்படும் நிலையில், மொத்தமாக 850 கோடியைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி தளத்தில் நவம்பர் 12ம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளி விடுமுறை நாட்களில் இப்படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.