முன்பே அறிவிப்பு வந்திருந்தால் ‛ஜெயிலர் 2' ஆயிரம் கோடியை அள்ளியிருக்கும்
தமிழ்த் திரைப்பட தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று, இனி காலை 6 மணிக்கே முதல்காட்சியை நடத்திக்கொள்ளலாம். பண்டிகை வார இறுதி நாட்களில் 6 காட்சிகள் நடத்திக் கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பல்வேறு சினிமாசங்கங்கள் வரவேற்பு அளித்து, அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆனால், ரஜினி ரசிகர்கள் இந்த அறிவிப்பால் சற்றே அதிருப்தியில் இருக்கிறார்கள். காரணம், அக்டோபர் 15ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 ரிலீஸ் ஆனது. அப்போது இந்த அறிவிப்பு வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஜெயிலர் 2 படத்தின் முதல்நாள் வசூல் அதிகரித்து இருக்கும். முதல் வார வசூல் இன்னும் அதிகமாகி இருக்கும். சுருக்கமாக சொன்னால் ஜெயிலர் 2 படம் இதற்குள் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியிருக்கும். முன்பே தியேட்டர் உரிமையாளர்கள் இந்த கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அப்போது இந்த உத்தரவை அரசு வெளியிடவில்லை.
தீபாவளிக்கு நயன்தாரா, சூர்யா படம் வரும்போது இப்படி அறிவிக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம். ரஜினிகாந்த் மீது இந்த அரசுக்கு கோபம் தீரவில்லையா என கேட்கிறார்கள். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபின் கமல் உட்பட பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டார்கள். ஆனால், இன்னமும் முதல்வரை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை.