உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 தீபாவளி படங்கள், முன்பதிவில் முந்துவது யார் ?

2026 தீபாவளி படங்கள், முன்பதிவில் முந்துவது யார் ?

2026ம் வருட தீபாவளி வரும் ஞாயிறு நவம்பர் 8ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' படமும், சூர்யா நடித்த 'சீன்' படமும் வெளியாக உள்ளன. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள 'இராமாயணம்' நாளை நவம்பர் 5ம் தேதி வெளியாகிறது.

இந்த மூன்று படங்களுக்குமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில் எந்தப் படத்திற்கு வரவேற்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் டிரெண்டிங்கில் நாளை வெளியாகும் 'இராமாயணம்' படம் கடந்த ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

'சீன்' படத்திற்கு 9 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவாகி உள்ள நிலையில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் டிரெண்டிங்கிலேயே இடம் பெறவில்லை. 'சீன்' படத்திற்கு காலை 6 மணி காட்சிகளுக்கான முன்பதிவு அதிக தியேட்டர்களில் நடைபெறும் நிலையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு ஒரு சில தியேட்டர்களில் மட்டும்தான் காலை 6 மணி காட்சிகளுக்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.

காலை 6 மணி சிறப்புக் காட்சிகளால் முன்னணி நடிகர்களின் படங்களுக்குத்தான் வசூல் அதிகமாகும். மற்ற படங்களுக்கு அந்தக் காட்சிகளுக்கான முன்பதிவு கூட நடக்காமல், வழக்கம் போல 10 மணிக்கு மேல்தான் காட்சிகளை நடத்தும் சூழல் உருவாகலாம். மேலும், படம் நன்றாக இருப்பதைப் பொறுத்தும் அது அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !