உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை : கிதார் கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை : கிதார் கலைஞர் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர் சுதர்சனத்தின் மகனும், இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞருமான சதா என்கிற சதானந்தம் (79) வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார். 40 ஆண்டுகளுக்கு மேல் இளையராஜாவின் முதன்மை கிதார் கலைஞராக பணியாற்றிய இவர் 5000 பாடல்களுக்கு பணிபுரிந்து உள்ளார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதோடு மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கும் அவர் அஞ்சலி செலுத்தவில்லை. அது தொடர்பான விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‛‛ஆரம்பக் காலத்தில் இருந்து நீண்ட காலமாக என்னுடன் பணிப்புரிந்த சதானந்தம் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து மிகவும் துக்கமடைந்தேன். காலமானவர்களை அந்த நிலையில் நான் பார்ப்பது கிடையாது. பார்ப்பதை விரும்பவும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் என்னுடன் உயிருடன் பணியாற்றியவர்கள், வாழ்ந்தவர்கள், என் உணர்வோடு கலந்தவர்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !