உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திகை மாதம் வெளியாகும் 'மணிகண்டா' படம்: பெரிய வழிபாதை பயணமே கதை

கார்த்திகை மாதம் வெளியாகும் 'மணிகண்டா' படம்: பெரிய வழிபாதை பயணமே கதை


தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நாயகனாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாகவும் நடிக்கும் புதிய திரைப்படம் 'மணிகண்டா'. விஷ்ணு சசி சங்கர் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மிகம், பக்தி மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக 'மணிகண்டா' உருவாகி உள்ளது. “தத் த்வம் அஸி” என்ற பெயரில் படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு, இப்போது 'மணிகண்டா' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரமாண்டமான ஐயப்பன் சிலை, அதைச் சுற்றிலும் தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்துள்ளன. விண்வெளியை நினைவூட்டும் பின்னணியும், ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும் போஸ்டருக்கு பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. 'இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்' என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த பர்ஸ்ட் லுக், இறைநம்பிக்கையையும் பக்தியையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தை உணர்த்துகிறது.

மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான பெரிய பாதையில் பயணித்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களின் ஆன்மிகப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. 'காந்தாரா', 'ஹனுமான்', 'கருப்பு' போன்ற பக்தி மற்றும் தெய்வீக அம்சங்கள் கலந்த படங்களின் வரிசையில், 'மணிகண்டா' படம், ஐயப்ப பக்தர்களுக்கு உகந்த இந்தாண்டு கார்த்திகை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !