உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்தித்த பார்த்திபன்

பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்தித்த பார்த்திபன்

'புதிய பாதை' படத்திற்கு பிறகு ஜாலியான காமெடி படங்களில் நடித்தும், இயக்கியும் வந்த பார்த்திபன் உள்ளத்தை உருக வைக்கிற மாதிரி ஒரு சென்டிமெண்ட் படம் நடிக்க முடிவு செய்தார். அதற்காக 'சுகமான சுமைகள்' என்ற கதையை எழுதினார். ஆனால் அந்த கதையை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் பார்த்திபன் மனைவி சீதாவே தயாரித்தார். பார்த்திபன் சொந்தமாக தயாரித்த முதல் படம் இது.

படத்தில் பார்த்திபனுடன் ஷாலி, ராதாரவி, விஜய குமார், ஸ்ரீதேவி விஜயகுமார், குட்டி பத்மினி, பூர்ணம் விஸ்நாதன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசை அமைத்திருந்தார். மூன்று தங்கைகளை கரையேற்ற வேண்டிய அண்ணன் போராடி தங்கைகளை வாழ வைத்தாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை. பார்த்திபன் குறும்புகளை பார்க்க சென்ற ரசிகனை குலுங்கி குலுங்கி படம் அழ வைத்தது. படம் பெரும் தோல்வி அடைந்து பார்த்திபனுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த விரக்தியில்தான் பார்த்திபன் 'உள்ளே வெளியே' என்ற படத்தை எடுத்து இழந்த பணத்தை மீட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !