‛பேமிலி பாய்' டீசர் வெளியீடு : டிச.,11ல் படம் ரிலீஸ்
நடிகர் சூர்யா தயாரித்த, ‛ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் மிதுன் மாணிக்கம். இவர் இப்போது இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்துள்ள படம், ‛பேமிலி பாய்'. எம்.சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், அருள்தாஸ், பி. எல். தேனப்பன், சிவம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது... அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்... என இந்த டீசர் தொடங்குகிறது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. 2020ம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்ப ஆக் ஷன் திரில்லராக இப்படம் உருவாகி உள்ளது.
வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.