உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அண்ணாமலை' ரீமேக் விவகாரம்! ரஜினியின் மக்கள் தொடர்பாளரின் கருத்துக்கு சிவகார்த்திகேயன் பதிலளிப்பாரா?

'அண்ணாமலை' ரீமேக் விவகாரம்! ரஜினியின் மக்கள் தொடர்பாளரின் கருத்துக்கு சிவகார்த்திகேயன் பதிலளிப்பாரா?


சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், 1992ம் ஆண்டில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 'அண்ணாமலை' படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். ஒரு பொது நிகழ்ச்சியில் தொகுப்பாளர் இது குறித்துக் கேட்டபோது, ரீமேக் உரிமைகள் குறித்துப் பேசி, ஒரு இயக்குநரைக் கண்டறிந்து, ரஜினிகாந்தின் ஆசிகளோடு இதனை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறினார்.

ஆனால் இப்படி சிவகார்த்திகேயன் அண்ணாமலை படத்தின் ரீமேக் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளரான ரியாஸ் கே. அகமத் ரீமேக் படங்கள் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்தது மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது.

அவர் கூறுகையில், வரலாற்றுப் புகழ்பெற்ற காவியத் திரைப்படங்கள் ரசித்துப் பார்ப்பதற்கே தவிர, மீண்டும் ரீமேக் செய்வதற்காக அல்ல. தயாரிப்பாளர்கள் அசல் திரைப்படத்தின் பெருமையை ரீமேக் என்ற பெயரில் பாழ்படுத்தாமல், அதன் பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும் வகையில் அதைப் பாதுகாப்பதே நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயனின் விருப்பத்திற்குப் பிறகு ரியாஸ் அகமத்தின் இந்தக் கருத்து வெளியானதால், இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போது சிவகார்த்திகேயன் இந்தக் கருத்துக்குப் பதிலளிப்பாரா அல்லது இதை கடந்து போய் விடுவாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !