'ஸ்லம்டாக்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 16 hours ago
பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‛ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு'. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்களுடன் தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்ஹாஜீ , வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூரி ஜெகன்நாத் இயக்கி உள்ளார். முக்கிய படப்பிடிப்பு காட்சிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி வரும் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.