உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சல்மான் உடன் டைகர் ஷெராப் கூட்டு : துப்பாக்கிச்சூடு பற்றி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எச்சரிக்கை

சல்மான் உடன் டைகர் ஷெராப் கூட்டு : துப்பாக்கிச்சூடு பற்றி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எச்சரிக்கை

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது குறித்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்களின் ஆடியோ வெளியாகி உள்ளது. மேலும் இது எச்சரிக்கை தான் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகனும், நடிகருமான டைகர் ஷெராப் நேற்று மும்பை நகரில் உள்ள ஜூஹூ பகுதியில் கால்பந்து விளையாடி விட்டு தனது காரில் திரும்பியபோது மர்ம கும்பல் மூன்று பேரால் சுடப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் அவர் உயிர் தப்பினார். அவரது கார் டிரைவருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 15 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் சேர்ந்த அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோரின் பெயரில் ஒரு ஆடியோ மற்றும் சமூக வலைதளப் பதிவு வெளியாகியுள்ளது. அதில் தன்னை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி, நடிகர் டைகர் ஷெராப் தங்கள் இலக்குப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று டைகர் ஷெராபிற்கு என்ன நடந்ததோ, அதற்கு ஹர்மன் சாந்துவும் நானும் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். சல்மான் உடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று தங்கள் அறிவுறுத்தல்களை அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அவர் இணைந்து பணியாற்றுகிறார். இது சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்குமான எச்சரிக்கை. பிஷ்னோய் சமூகத்தினரிடம் சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குடும்பத்தினர், செல்லப்பிராணிகளையும் சும்மா விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளனர்.

3பேர் கைது
இதனிடையே டைகர் ஷெராப் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !