ரீ ரிலீஸ் ஆகிறது 96 : திரிஷா பேசுவாரா?
பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் கூட ஜானு என்ற பெயரில் சர்வானந்த், சமந்தா நடிப்பில் ரீ மேக் ஆனது. பிரேம் தெலுங்கு பதிப்பை இயக்கினார். கோவிந்த் வசந்தா பாடல்களும் ஹிட்டாகின. கன்னடத்தில் ப்ரீத்தம் இயக்கத்தில் கணேஷ், பாவனா நடித்தனர். ஏனோ இந்தி ரீமேக் நடக்கவில்லை. 96 படத்தில் அடுத்த பாகம் உருவாக்கமும் தோல்வியில் முடிந்தன. விஜய் சேதுபதி, திரிஷா சினிமா வாழ்க்கையில் 96 முக்கியமான படமாக அமைந்தது.
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குபின் அக்டோபர் 9ம் தேதி 96 படம் ரீ ரிலீஸ் ஆகிறது. திரிஷா நடித்த ஜானு கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினர். 8 ஆண்டுகளுக்குபின் ரீ ரீலீஸ் ஆகும் இந்த படம் குறித்து திரிஷா சோஷியல் மீடியாவில் பேசலாம். தனது மலரும் நினைவுகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 96 படத்துக்குபின் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் படத்தை இயக்கிய பிரேம்குமார் இப்போது பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.