ரஜினியின் ‛ஜெயிலர் 2' டிரைலர் வெளியானது : மீண்டும் வருகிறார் டைகர் முத்துவேல் பாண்டியன்
ஜெயிலர் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் ‛ஜெயிலர் 2' படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்., 15ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
முதல்பாகத்தில் நடித்த யோகிபாபு, சிறப்பு ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோர் இதிலும் வருகின்றனர். புதிய வில்லன்களாக சுராஜ் வெஞ்சராமூடு, எஸ்ஜே சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடிகை வித்யாபாலன் ஆகியோரும் வருகின்றனர். இவர்கள் அனைவரும் டிரைலரில் இடம் பெற்றுள்ளனர். டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே டிரெண்ட் ஆனது.