விஜய் சேதுபதியை பார்த்தால் பயம் : லிஜோமோல் ஜோஸ்
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்து, கடந்தவாரம் வெளியான படம் ‛பத்தா'. சென்னையில் நடந்த இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் லிஜோமோல் ஜோஸ் பேசியதாவது...
பத்தா படத்தில் நடித்தது சந்தோசம் மட்டுமல்ல, பெருமை. இந்த படம் பற்றி எல்லாரும் பேசுறாங்க. இந்த கன்னியம்மா கேரக்டருக்கு என்னை தேர்வு செய்தது தயாரிப்பாளர் அட்லி தான், அவருக்கு நன்றி. ஹீரோ விஜய் சேதுபதியை பார்த்தால் பயம். அவர் நடிப்பு. ஆனாலும் அவர் சக நடிகர்கள் நடிக்க இடம் கொடுக்கிறார். அவருடன் நடித்தது மறக்க முடியாதது.
இதில் சிறுவனாக நடித்த சாய்க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசை எல்லா இடத்திலும் கேட்கிறது. செல்லமே மகளே பாடல் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி உள்ளது என்றார்.
படப்பிடிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு தான் ஹீரோயின் லிஜோ மோலை கமிட் செய்தோம் என்றார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.