ஜெயராம் - சிம்ரன் நடிக்கும் புதிய படம்: படப்பிடிப்பு துவக்கம்
ADDED : 5 days ago
ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 'தேஜாவு, வித்தைகாரன்' படங்களை தயாரித்த வொயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி மற்றும் ரிடெக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷான்ஜன்.ஜி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தி ஷோ பீபிள் சார்பில் நடிகர் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார்.
'ராட்சசி', 'கழுவேத்தி மூர்க்கன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.ஒய் கவுதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.