உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ரிலீஸ்: விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம்

8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ரிலீஸ்: விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம்


தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று (செப்.,30) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். தலைவர் கே. மோகன் குமார். துணைத் தலைவர்கள் எம்.கணேஷ் குமார், ஏ. விஜய்குமார், செயலாளர் எஸ். நந்தகோபால். பொருளாளர் டி. குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

பின்னர் நடந்த பொதுக்குழுவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்னர் குறைந்தபட்சம் 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, அதன் மூலம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் தொழிலை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த நடைமுறை அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் எந்த கூட்டு கூட்டத்திலும் விநியோகஸ்தர்கள் சங்கம் கலந்து கொள்ள அழைப்பதில்லை. இனி வரும் காலங்களிலும் அனைத்து கூட்டங்களிலும் விநியோகஸ்தர்கள் சங்கமும் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !