உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக தமிழில் படம் இயக்கும் ஆர்.பால்கி; நாயகியாக நடிக்கிறார் வித்யா பாலன்

முதன்முறையாக தமிழில் படம் இயக்கும் ஆர்.பால்கி; நாயகியாக நடிக்கிறார் வித்யா பாலன்


ஹிந்தியில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் ஆர்.பால்கி. இவர் நடிகர் தனுஷை வைத்து ஹிந்தியில் 'ஷமிதாப்' படத்தை இயக்கியவர். பெரும்பாலும் நடிகர் அமிதாப் பச்சனை வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து 'சீனி கம்', 'பா' மற்றும் 'ஷமிதாப்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், தற்போது முதன்முறையாக தமிழில் ஒரு படம் இயக்க இருக்கிறார் ஆர்.பால்கி.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். ஏற்கனவே 2009ல் பால்கி இயக்கிய 'பா' படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து மீண்டும் இவரது டைரக்ஷனில் நடிக்கிறார். அது மட்டுமல்ல, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜெயிலர் 2' திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள வித்யா பாலன், அடுத்ததாக நடிக்கும் தமிழ் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !