உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 6 தேசிய விருதுகள் பெற்ற தனுஷ் : எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சாதனையை முறியடிப்பாரா?

6 தேசிய விருதுகள் பெற்ற தனுஷ் : எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் சாதனையை முறியடிப்பாரா?

குஜராத்தில் இன்று நடந்த 72வது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டியும், கேப்டன் மில்லர் படத்துக்காக சிறப்பு விருதை தனுசும் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு இது முதல் தேசிய விருது அல்ல. 1989ம் ஆண்டு ஒரு வடக்கன் வீரகதா படத்துக்காகவும், 1993ல் மதிலுகள் மற்றும் பொந்தன் மட படங்களுக்காகவும், 1998ல் பாபா சாகேப் அம்பேத்கர் படத்துக்காகவும் மம்மட்டி தேசியவிருது பெற்றார். இந்த முறை 2024ம் ஆண்டு வெளியான பிரம்மயுகம் படத்துக்காக 4வது தேசியவிருது பெற்றுள்ளார்.

தனுஷ் நடிகராக ஆடுகளம், அசுரன் படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். அதேபோல் தயாரிப்பாளராக காக்கா முட்டை, விசாரணை ஆகிய படங்களுக்கு பெற்றுள்ளார். நடுவர் குழுவின் சிறப்பு விருதாக சிறந்த நடிகர் பிரிவில் கேப்டன் மில்லர் படத்துக்கும் சிறந்த படம் என்ற பெயரில் ராயன் படத்துக்கும் விருது பெற்று இருக்கிறார். ஆக, தனுஷ் மொத்தம் 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இது தமிழில் மட்டுமல்ல, இந்தியளவில் ஒரு சினிமா பிரபலம் பெற்ற சாதனை. ஆனாலும், தனுஷை விட அதிக தேசிய விருதுகளை ஒருவர் தமிழில் பெற்று இருக்கிறார். அவர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். அவர் மொத்தம் 9 தேசிய விருதுகளை பெற்று இருக்கிறார். ராக் (1989), ராக் பிராக் (1996), நவுகா சரித்ரமு (1997), தி டெரரிஸ்ட் (1998), வான பிரஸ்தம் ( 2000), கன்னத்தில் முத்தமிட்டால் (2002), பிராக்(2008), சிறந்த நடுவர் விருது - குட்டி ஸ்ராங்க் (கமினே), கேரள வர்மா பழசி ராஜா மற்றும் சிவரஞ்சனியும் சில பெண்களும் (2020) ஆகிய படங்களுக்காக பெற்று இருக்கிறார்.

இந்த சாதனையை வருங்காலத்தில் தனுஷ் முறியடிப்பாரா என்பது சவாலான விஷயமே. இந்தியளவில் சினிமாவுக்காக அதிக தேசிய விருதுகளை பெற்றவர் வங்காள மொழியை சேர்ந்த இயக்குனர் சத்யஜித் ரே. நடிப்பு, இயக்கம், இசை என அவர் பெற்ற தேசிய விருதுகள் எண்ணிக்கை 32 முதல் 37 வரை இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !