உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இடுப்பு காயத்திற்கு பிறகு முதல்முறையாக வெளியே வந்த ராஷ்மிகா

இடுப்பு காயத்திற்கு பிறகு முதல்முறையாக வெளியே வந்த ராஷ்மிகா

ரவீந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் மைசா. இதில் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தீவிரமான கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக நடிக்கிறார். இதுவரை நடித்திராத அதிரடி ஆக்ஷன் அவதாரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார் ராஷ்மிகா. இதில் நடித்து வந்தபோது அவரது இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்து வந்த ராஷ்மிகா, காயத்திற்கு பிறகு முதல்முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டியின் மகனின் நிச்சயதார்த்த விழாவில் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா ஜோடியாகக் கலந்து கொண்டார். காயத்திற்குப் பின் ராஷ்மிகா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அவர் அடுத்த மாதம் மைசா படப்பிடிப்பில் மீண்டும் இணைவார் என கூறப்படுகிறது.

ராஷ்மிகா கைவசம் தற்போது இரண்டு படங்கள் உள்ளன. அதில் ஒன்று பெண் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட மைசா, மற்றொன்று விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் ரணபாலி. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. மைசா படத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் பணிபுரிந்த சர்வதேச ஆக்ஷன் இயக்குநர் ஆண்டி லாங் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார். இப்படத்துக்காக ராஷ்மிகா டூப் போடாமல் 20 மணி நேரம் தொடர்ந்து அண்டர்வாட்டர் சண்டைக்காட்சியிலும் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !