பெளசி வெளிநாட்டு உரிமைகள் விற்பனை : டிசம்பரில் ரிலீஸ் உறுதி
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் பௌசி. சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய காலகட்ட கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். இப்பம் டிசம்பர் 3ம் தேதி வெளியாகிறது.
படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமைகயை பார்ஸ் பிலிம் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது டிசம்பர் 2 அன்று வெளிநாடுகளில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் தொடங்குகிறதாம். இதன் மூலம், திட்டமிட்டபடி இப்படம் டிசம்பர் 3ல் ரிலீஸ் என்பது உறுதியாகியுள்ளது.
சாஹோ உள்ளிட்ட பிரபாஸின் பல படங்களை பார்ஸ் பிலிம் நிறுவனம் ஏற்கனவே வெளிநாடுகளில் விநியோகம் செய்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்திற்காக அந்நிறுவனத்துடன் சிறப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், தற்போது பௌஜி மற்றும் ஸ்பிரிட் ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் பங்கேற்று வருகிறார் பிரபாஸ்.