400 மரங்களுக்கு நடுவில் சுனில் ஷெட்டியின் கனவு இல்லம்
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி '12 B' மற்றும் ரஜினியின் 'தர்பார்' படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் தான். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு அருகில் உள்ள காண்டாலா என்கிற பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினார். அப்போது அந்த இடம் எந்தவித மரங்களும் இன்றி வறண்ட, ஒரு வெறிச்சோடிய பாலைவனம் போன்ற பகுதியாக இருந்தது. ஆனாலும், அந்த நிலத்தில்தான் தனது கனவு இல்லத்தை உருவாக்கினார் சுனில் ஷெட்டி.
பெரிய கான்கிரீட் வீடு கட்டியதோடு நின்று விடாமல், வீட்டைச் சுற்றிலும் பல்வேறு விதமான 400 மரங்களை நட்டு வைத்து வளர்த்து வந்தார் சுனில் ஷெட்டி. இந்த 16 ஆண்டுகளில் அது ஒரு பசுமையான வனப்பகுதி போலவே மாறிவிட்டது. சுனில் ஷெட்டி இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை விரும்புபவர் என்பதால், இப்படி இயற்கையான சூழலில் தனது கனவு இல்லம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு மெனக்கெட்டதாக கூறியுள்ளார்.