டாக்சிக் பட நிகழ்ச்சியில் விபத்து : 2 பேர் காயம்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛டாக்சிக்'. பான் இந்தியா படமாகவும், ஆங்கில மொழியிலும் இப்படம் வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க அதிரடி ஆக் ஷன் கதையில் ரத்தம், வெட்டு குத்து, துப்பாக்கி சத்தம் என வன்முறை படமாக உருவாகி உள்ளது. தணிக்கையில் ‛ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. அடுத்தவாரம் ஆக., 26ம் தேததி படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஐதராபாத்தில் கல்லூரி ஒன்றில் நடந்தது. ஏராளமானபேர் பங்கேற்றனர். யஷ் பேசிய போது அங்கிருந்த சிலர் ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கும் கம்பத்தில் ஏறினர். அப்போது அந்த கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் இரு மாணவர்களுக்கு கால் எலும்பு முறிந்தது. பெண் ஒருவர் லேசாக காயம் அடைந்தார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது யஷ் தனது பேச்சை நிறுத்தி பாதுகாவலர்களை அழைத்து அங்கு அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என கேட்டு நலம் விசாரித்தார்.