உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள்

காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், அதிதி ஷங்கர் நடிக்கும் படம் ஒன்ஸ்மோர். ஆகஸ்ட் 28ல் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இதில் பேசிய அர்ஜூன் தாஸ் ‛‛என் படங்களில் ரத்தம், வன்முறை, அடிதடி இருக்கும். அதெல்லாம் இல்லாத காதல் படம் இந்த கதை. என் குடும்பத்தினர், என் நண்பர்கள் இப்படிப்பட்ட படத்தை விரும்புகிறார்கள். இதில் அதிதி ஷங்கர், சோனா நடிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த சோனா, அதிதி ஆகியோர் இல்லாமல் இந்த படம் இவ்வளவு சிறப்பாக வந்து இருக்காது.

பல கம்பெனிகளில் இந்த கதையை சொன்னார் இயக்குனர். அவர்கள் நாங்கள் தயாரிக்கிறோம். ஆனால், ஹீரோவை மாற்றுங்கள் என்றார்கள். இயக்குனர் அதை மறுத்துவிட்டார். என்னை வைத்துதான் இந்த படம் எடுப்பேன் என உறுதியாக இருந்தார். கடைசியில் குட்நைட்,டூரிஸ்ட் பேமிலி படங்களை தயாரித்த யுவராஜ் தயாரிக்க வந்தார்'' என்றார்.

ஹீரோயின் அதிதிஷங்கர் பேசுகையில், 'நான் ஒருமுறை ரசிகையாக அர்ஜூன்தாசை சந்தித்து, அவருடன் போட்டோ எடுத்தேன். அடுத்து ஒரு நிகழ்ச்சியில் அவர் கையால் விருது வாங்கினேன். அதற்கடுத்து இந்த பட பூஜையில் அவரை சந்தித்தேன். அவர் இப்போது என் சிறந்த நண்பர் ஆகிவிட்டார். நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த படத்தில் என் உதவியாளராக பணியாற்றியவர் இப்போது உயிரோடு இல்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !