உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 21ல் எத்தனை படங்கள் ரிலீஸ்?

ஆகஸ்ட் 21ல் எத்தனை படங்கள் ரிலீஸ்?


2026ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் இரண்டு முக்கிய படங்கள் வெளிவந்தன. சூர்யா நடித்து வெளிவந்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 100 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. விஷால் இயக்கி, நாயகனாக நடித்து வெளிவந்த 'மகுடம்' படம் 2 கோடி வசூலைக் கூடப் பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலைத் தருகிறார்கள்.

இதனிடையே, கடந்த வாரப் படங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த வாரம் ஆகஸ்ட் 21ம் தேதி சில படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'மொத ராத்திரி' படம், சங்ககிரி ராஜ்குமார் இயக்கி நடித்துள்ள 'ஒன் மேன்' ஆகிய படங்கள் அன்றைய தினம் வெளியாகின்றன.

ரியோ நடித்துள்ள 'ராம் இன் லீலா' படத்திற்கு தலைப்பு சிக்கல் காரணமாக இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. சான்றிதழ் கிடைத்துவிட்டால் இந்த வாரம் வெளியாகலாம்.

இளன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !