உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தடைகள் நீங்கி தொடங்கிய ஸ்ரீலீலாவின் ஹிந்தி படப்பிடிப்பு!

தடைகள் நீங்கி தொடங்கிய ஸ்ரீலீலாவின் ஹிந்தி படப்பிடிப்பு!


தெலுங்கில் இளம் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ரீலீலா. 'பராசக்தி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தற்போது முதன் முறையாக ஹிந்தியில் அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கதான்யகியாக நடித்து வருகிறார். இதில் கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கிறார். ரொமான்டிக் மியூசிக்கல் கதை அம்சத்துடன் இது உருவாகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மும்பையில் துவங்கிய நிலையில், கால்ஷீட் மறுபடியும் மற்றும் சில பிரச்னைகள் காரணமாக திட்டமிட்டபடி நடைபெறாமல் தாமதமாகி வந்தது.

இந்த நிலையில் பிரச்சினைகள் நீங்கி தற்போது படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாகத் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கார்த்திக் ஆர்யன், ஸ்ரீலீலா இருவரது காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடத்திலிருந்து தெலுங்கு மற்றும் தமிழில் ஸ்ரீலீலாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிடைக்காத நிலையில், ஹிந்தியில் அவரது அறிமுகம் அங்கே முதல் வெற்றியை அவருக்கு பெற்றுத் தருமா பொறுத்திருந்து பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !