2 நாளில் 100 கோடியை கடந்த ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா நடித்த ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் இரண்டு நாட்களில் உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் தெலுங்கில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வேறு படங்கள் போட்டியில் இல்லாததாலும் ‛கருப்பு' படத்தின் வெற்றியின் காரணமாகவும் இந்த வசூலை இரண்டே நாள்களில் எளிதாக பெற முடிந்ததாக கூறப்படுகிறது.
சூர்யா நடித்த ‛கருப்பு' படம் 300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்த நிலையில் இந்த படம் அதை மிஞ்சுமா என்பது வரும் வாரத்தில் தெரியும். தமிழகத்தை விட ஆந்திரா, தெலுங்கானா மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. ‛வாத்தி, லக்கி பாஸ்கர்' படங்களின் இயக்குனர் வெங்கி இயக்கி இருப்பதால் அவர் படம் என்ற கோணத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கருப்பு படத்தை தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் அதிக வசூல் ஈட்டி வருவதால் சூர்யா தரப்பு, அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.