உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோவை ஓவர்டேக் செய்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம்

ஹீரோவை ஓவர்டேக் செய்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரம்


தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினை மையமாக வைத்து தான் பெரும்பாலான படங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சில படங்களில் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் சப்போர்டிங் கேரக்டர்கள், எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்து விடும். சில சமயங்களில் அந்த படம் ஹிட் ஆவதற்கும் அந்த கேரக்டர்கள் காரணமாக அமைந்து விடும். ஒரு படம் ஹிட் ஆகி, அந்த படத்தின் ஹீரோ எவ்வளவு பிரபலம் அடைந்தாரோ, அதற்கு இணையான, சில சமயங்களில் அதைவிடவும் அதிகமாக - ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, காலம் கடந்தும் நினைவில் நிற்கும் 10 சிறந்த துணை கதாபாத்திரங்கள் இதோ:

1. வடிவேலு

பிரண்ட்ஸ் படத்தில் 'கான்ட்ராக்டர் நேசமணி' ஆகவும், வின்னர் படத்தில் 'கைப்புள்ள' ஆகவும் இவர் செய்த அசாத்திய நகைச்சுவை, படத்தின் கதாநாயகர்களைத் தாண்டி ரசிகர்களின் மனதை இன்றும் ஆட்சி செய்கிறது. இவரின் காமெடிக்காகவே இந்த படங்கள் ஹிட் ஆகின. இந்த இரண்டு படங்களிலும் வரும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் தான் இன்று வரை மீம்களில் டாப்பில் உள்ளன.

2. பிரகாஷ் ராஜ்

கில்லி படத்தில் செல்லம் முத்துப்பாண்டியாக வில்லன் கலந்த துணை கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையான (சில இடங்களில் அவரை விட அதிகமான) மாஸ் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். அதே போல் மொழி படத்திலும் ஹீரோ பிரித்விராஜாக இருந்தாலும் பிரகாஷ்ராஜின் கேரக்டர் தான் ரசிகர்களை அதிகம் வந்தது.

3. எஸ்.ஜே.சூர்யா

தன் அசாத்தியமான எக்ஸ்பிரஷன்கள் மற்றும் எனர்ஜியால், மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் கதாநாயகர்களுக்கு சவாலாக நின்று காட்சிகளைத் தனதாக்கிக் கொண்டார்.

4. பஹத் பாசில்

விக்ரம் படத்தில் 'அமர்' கதாபாத்திரத்திலும், மாமன்னன் படத்தில் 'ரத்தினவேலு' கதாபாத்திரத்திலும் தனது நுட்பமான நடிப்பால் முதன்மை கதாபாத்திரங்களையே ஓவர்டேக் செய்து பேசப்பட்டார் பஹத் பாசில்.

5. கார்த்திக்

மெளன ராகம் படத்தில் மைக் மோகன் தான் ஹீரோ. ஆனால் மிகவும் குறைந்த நேரமே திரையில் வரும் 'மனோகர்' கதாபாத்திரத்தில் நடித்து, ஒட்டுமொத்த திரைப்படத்தின் போக்கையும் மாற்றி ரசிகர்களின் இதயங்களை முழுமையாக வென்றவர் கார்த்திக். இவர் பேசிய மிஸ்டர் சந்திரமெளலி டயலாக் இன்று வரை பிரபலம்.

6. அரவிந்த் சாமி

தனி ஒருவன் படத்தில் 'சித்தாா்த் அபிமன்யு' என்ற வில்லன்/துணை கதாபாத்திரத்தில் தனது ஸ்டைலிஷான நடிப்பால் கதாநாயகனை விடவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

7. சந்தானம்

2010-களில் வெளியான பல படங்களில் கதாநாயகனின் நண்பராக வந்து, தனது கவுண்டர் காமெடிகளால் படத்தின் வெற்றிக்கே முதன்மை காரணமாக அமைந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற படங்களில் சந்தானத்தின் காமெடிக்காகவே அந்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.

8. எம். எஸ். பாஸ்கர்

8 தோட்டாக்கள் திரைப்படத்தில் ஒரு எமோஷனல் துணை கதாபாத்திரத்தில் தோன்றி, படத்தின் முதன்மை நாயகனையும் தாண்டி பார்வையாளர்களைக் கண் கலங்க வைத்தார். அதேபோல் உத்தமவில்லன், பார்க்கிங் போன்ற படங்களில் இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.

9. பசுபதி

சார்பட்டா பரம்பரை படத்தில் 'ரங்கன் வாத்தியார்' கதாபாத்திரத்தில் மிக முதிர்ச்சியான நடிப்பை வழங்கி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். அதே போல் விருமாண்டி படத்தில் ஹீரோ கமல்ஹாசனுக்கு இணையாக பசுபதி நடித்த கொத்தாள தேவர் கேரக்டர் பேசப்பட்டது.

10. கவுண்டமணி

80 மற்றும் 90-களில் கதாநாயகர்களுக்கு இணையாக போஸ்டர்களில் இடம் பெற்று, தனது நகைச்சுவையால் படங்களை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கினார். அதிலும் கரகாட்டக்காரன், உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் ஹீரோவை விட கவுண்டமணியின் கேரக்டர் தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

11. விஜய்சேதுபதி

'விக்ரம் வேதா' படத்தில் ஹீரோவை மாதவனை ஓவர்டேக் செய்து தனது நடிப்பால் முத்திரை பதித்து இருப்பார் விஜய் சேதுபதி. இதேப்போல் கமலின் விக்ரம், விஜயின் மாஸ்டர் படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.

12. விவேக்

பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவுடன் இணைந்து நடித்தாலும், தன் சமூகக் கருத்துகள் மற்றும் நகைச்சுவையால் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் விவேக். குறிப்பாக விக்ரம் நடித்த ‛காதல் சடுகுடு' படத்தில் இவரது சமூக கருத்துக்கள் பெரிதும் பேசப்பட்டன.

ஒரு நல்ல திரைப்படம் என்பது கதாநாயகனை மட்டும் நம்பி இருப்பதில்லை, அவரைச் சுற்றி இருக்கும் இந்த மாதிரியான வலுவான பக்கபலமான கதாபாத்திரங்கள் தான் அந்த உலகத்தை உண்மையானதாக மாற்றுகின்றன!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !