உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்யாண வீடு பின்னணியில் இரண்டு சினிமா நிகழ்ச்சிகள்

கல்யாண வீடு பின்னணியில் இரண்டு சினிமா நிகழ்ச்சிகள்

சென்னை நட்சத்திர ஓட்டலில் நேற்று பியார் பிரேமா கல்யாணம் படத்தின் நிகழ்ச்சி நடந்தது. கவின் நடித்த ஸ்டார் படத்தை இயக்கிய, ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் படங்களை இயக்கிய இளன் ஹீரோ. சான்வீ மேக்னா ஹீரோயினாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் ஆகஸ்ட் 21ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது.

கல்யாணம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி கல்யாண செட் அப்பில் கெட்டி மேளம், மாப்பிள்ளை, பொண்ணு ஊர்வலம் என நடந்தது. ஹீரோ, ஹீரோயினும் மாப்பிள்ளை பொண்ணு மாதிரி கலந்து கொண்டனர்.

அதேப்போல், ராஜாகருப்பசாமி இயக்கத்தில் ரிஷகாந்த், அனிஷ்மா நடிக்கும் மொத ராத்திரி பட நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. அதுவும் திருமண செட் அப்பில் நடந்தது. ஹீரோ, இயக்குனர் மாப்பிள்ளை மாதிரி வேஷ்டியிலும் ஹீரோயின் அனிஷ்மா மணப்பெண் மாதிரியும் வந்தனர். விழாவில் நாதஸ்வரம் ஒலித்தது. பின்னர் கல்யாண விருந்து பரிமாறப்பட்டு, தாம்பூலம் வழங்கப்பட்டது. மற்ற பட நிகழ்ச்சி மாதிரி அல்லாமல், கதை, தலைப்புக்கு ஏற்ப இந்த இரண்டு படக்குழுவினரும் இப்படி வித்தியாசமாக விளம்பர நிகழ்வை நடத்தி அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !