உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் அறிமுகமாகும் ருக்மணி வசந்த்

மலையாளத்தில் அறிமுகமாகும் ருக்மணி வசந்த்


விஜய்சேதுபதி நடித்த 'ஏஸ்', சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் கன்னட நடிகையாக அறியப்படுகிறார் ருக்மணி வசந்த். அவர் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே போதிய வரவேற்பை பெறாததால் தமிழில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள 'டாக்சிக்' அடுத்து வெளிவர உள்ளது.

இந்த நிலையில் அவர் மலையாள சினிமாவில் கால் பதிக்கிறார். நிவின் பாலியின் 51வது படத்தில் இணைந்துள்ளார். 'சார்லி, நையாட்டு' உள்ளிட்ட படங்களை தயாரித்த மார்ட்டின் பிரக்கத் இப்படத்தை தயாரிக்கிறார். 'ஜய ஜய ஜய ஜய ஹே' படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான நாஷித் இப்படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து ருக்மணி வசந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “நான் பல நாட்களாக தூரத்திலிருந்து ரசித்த ஒரு திரையுலகில் இணைவது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !