உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் முரளி சர்மா

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் முரளி சர்மா

தெலுங்கு திரையுலகில் பிரபல ஹீரோக்களின் படங்களில் எல்லாம் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் தவறாமல் இடம்பெற்று வருபவர் நடிகர் முரளி சர்மா. தமிழில் 'அஞ்சான்', 'பாயும் புலி', 'ரத்னம்', 'மழை பிடிக்காத மனிதன்' என பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கடந்த 2012-ல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'கர்ம யோதா' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் முரளி சர்மா.

இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ராணுவப் பின்னணியில் உருவாகியுள்ள 'ஆபரேஷன் ட்ரால்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் முரளி சர்மா. அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !