உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய முயற்சி : சூர்யா

இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய முயற்சி : சூர்யா

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா- மமிதா பைஜு நடித்துள்ள படம் விஸ்வநாத் அன்ட் சன்ஸ். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சூர்யா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், முற்றிலும் வித்தியாசமான காதல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது. இதுபோன்ற கதைகள் அரிதாக மட்டுமே திரையில் காட்டப்படும். விஸ்வநாத் அன்ட் சன்ஸ் படத்தில் காட்டப்பட்டுள்ள காதல் கதைக்கு இதுவரை எந்தவொரு படத்திலும் நேரடி ஒப்பீடு இல்லை என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.

அதோடு, சூர்யா மற்றும் மமிதா இடையேயான வயது இடைவெளி கொண்ட காதலே இப்படத்தின் முக்கிய விவாதப் பொருளாகவும், கதையின் முதன்மை முரண் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அடித்தளமாகவும் அமைந்துள்ளது. ஒரு குடும்பத்தின் பின்னணியில் நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களையும், சமுதாயத்தில் வயது இடைவெளி உள்ள காதலைச் சுற்றியுள்ள பார்வையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !