உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 14 தோற்றத்தில் நடித்த சிவாஜி

பிளாஷ்பேக் : 14 தோற்றத்தில் நடித்த சிவாஜி

சிவாஜி, எம்ஜிஆர், பி.யூ.சின்னப்பா போன்றோர் இரண்டு மூன்று கேரக்டர்களில் நடித்தனர். முதன் முதலாக 9 கேரக்டர்களில் 'நவராத்திரி' படத்தில் சிவாஜி நடித்தார். அதேபோல முதன் முறையாக ஒரே படத்தில் அதிக தோற்றத்தில் நடித்தவர் எம்.என்.நம்பியார், 'திகம்பர சாமியார்' என்ற படத்தில் 12 தோற்றங்களில் நடித்தார். சிவாஜி பின்னர் அதனையும் முறியடித்தார். 'மருதநாட்டு வீரன்' என்ற படத்தில் 14 தோற்றங்களில் நடித்தார்.

மருதநாட்டு இளவரசி ஜமுனாவின் பாதுகாப்பு அதிகாரி சிவாஜி, ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பார்கள். அமைச்சரான பி.எஸ்.வீரப்பா, சிவாஜி மீது பழியொன்றை சுமத்தி நாடு கடத்தி விடுவார். பின்னர் ஜமுனாவை மணந்து தானே மன்னராக திட்டமிடுவார். நாடு கடத்தப்பட்ட சிவாஜி பல மாறுவேடங்களை போட்டு அரச ரகசியங்களை கண்டுபிடித்து படை திரட்டி நாட்டையும், காதலியையும் மீட்பதுதான் கதை.

பெரும்பாலான சரித்திர படங்களின் கதை இப்படித்தான் இருக்கும். ஜமுனாவின் அழகு இருந்தும், சிவாஜி 14 தோற்றங்களில் நடித்தும் படம் தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் பார்த்து சலித்த கதை, வலுவில்லாத திரைக்கதை. ராணி லலிதாங்கி, மர்ம வீரன், ராஜா தேசிங்கு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய டி.ஆர்.ரகுநாத்தான் இந்த படத்தை இயக்கி இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !