முதன்முறையாக நாகசைதன்யாவுக்கு இரவு உணவு சமைத்த சோபிதா துலிபாலா!
நாகர்ஜூனாவின் மூத்த மகனான நாகசைதன்யா தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக முன்னேறி வருகிறார். நடிகை சமந்தாவுடன் நடித்தபோது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. இவர்களின் திருமணம் 2024 டிசம்பருக்கு முன்பு நடைபெற்றது.
சமீபத்தில் நாகசைதன்யாவுக்கு இரவு உணவு சமைத்துக் கொடுத்துள்ளார் சோபிதா துலிபாலா. இதில் ஆச்சரியம் என்னவென்றால், “திருமணமாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் மனைவி எனக்கு இரவு உணவு சமைத்துள்ளார். ஏதோ இன்று சரியாக செய்திருக்கிறார் போல” என்று இதுகுறித்து நாக சைதன்யாவே நகைச்சுவையாக கூறியுள்ளார். மேலும் தங்கள் வீட்டு டைனிங் டேபிளில் உணவுகள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.