உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுபவமின்மையால் ஏற்பட்ட தவறுகள் ; நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஸ்வேதா மேனன் கடிதம்

அனுபவமின்மையால் ஏற்பட்ட தவறுகள் ; நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஸ்வேதா மேனன் கடிதம்


மலையாள திரையுலகில் 'அம்மா' என்கிற பெயரில் நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கடந்த மாதத்தில் இருந்து சங்க நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும், நிர்வாக முறைகேடுகள் குறித்தும் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவை காவல் நிலையம், நீதிமன்றம் வரை சென்றன. இதனால் தான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருடன் பல நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர்.

இருந்தாலும், மீண்டும் தானே தலைவராகத் தொடர்வதாக கூறியுள்ள ஸ்வேதா மேனன், தற்போது அதிருப்தியில் இருக்கும் சங்க உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளாராம். அதில், எங்கள் நிர்வாகத்தின் அனுபவமின்மையால் ஏற்பட்ட சில தவறுகளைத் திருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மோகன்லால் தலைமையிலான முந்தைய நிர்வாகக் குழுவின் நிதி அறிக்கைகளில் குளறுபடிகள் இருந்ததாகவும், கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிக்க தங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !