நிவின், மமிதா படம் ஆகஸ்ட் 21ல் ரிலீஸ்
'பிரேமலு' வெற்றி பெற்றாலும் அதன் இயக்குநர் கிரிஷ் அடுத்த படத்திற்காக நிறையேவே பாடுபட்டார். 'பிரேமலு' இரண்டாம் பாகத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார். ஆனால் அதில் அவருக்கு திருப்தி வரவில்லை. நேரடி தமிழ் படம் இயக்கும் முயற்சியில் இருந்தார் அதுவும் சரியாக அமையவில்லை.
தற்போது நிவின் பாலி, மைமிதா பைஜு நடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசை யமைத்துள்ளார்.
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 21ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.